/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/148_40.jpg)
நடிகர் விமல் தற்போது மூன்று படங்களை கைவசம் வைத்துள்ளார். ‘போகுமிடம் வெகு தூரம் இல்லை’, சார், தேசிங்குராஜா 2 உள்ளிட்ட படங்கள் ஆகும். இதில் போகுமிடம் வெகு தூரம் இல்லை படத்தின் முழு படப்படிப்பும் முடிந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது. சார் படத்தின் படப்பிடிப்பும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தேசிங்குராஜா 2 படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்த நிலையில் விமல் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரை பார்த்த பக்தர்கள் அவரிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்புசெய்தியாளர்களைசந்தித்த அவர் செய்தியாளர்களின்கேள்விகளுக்குபதிலளித்தார்.
அவரிடம், தயாரிப்பாளர் சங்கம்தனுஷுக்குஎதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்துகேள்விகேட்கப்பட்டது. அதற்கு “அது குறித்துஎனக்குதெரியாது”எனப்பதிலளித்தார். பின்பு அவரிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கும், “அதுவும்எனக்குத்தெரியாது”எனசொல்லிவிட்டு விடைபெற்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)